கர்நாடகா அரசானது, இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) மசோதாவின் வரைவினை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக, இது போன்றதொரு நடவடிக்கையைத் தொடங்கிய இரண்டாவது இந்திய மாநிலமாக இது அமைந்தது.
அந்த மாநிலத்தில் இயங்குதள அடிப்படையிலான இணையம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலனை ஒழுங்குபடுத்த இந்த மசோதா முயல்கிறது.
இந்தப் புதிய வரைவு ஆனது, ஒரு நல வாரியம் மற்றும் இணையம் சார்ந்தத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் நல நிதியை நிறுவ முயல்கிறது.
நிதி ஆயோக் அமைப்பின் 2022 ஆம் ஆண்டு அறிக்கையானது, 2029-30 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 23.5 மில்லியன் கிக் தொழிலாளர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடுகிறது.
பெங்களூரில் மட்டும் சுமார் 2 லட்சம் இணையம் மூலம் திரட்டப்படும் தொழிலாளர்கள் ஸ்விகி, சோமாட்டோ, ஊபர், ஓலா போன்ற பல தளங்களில் பணி புரிகின்றனர்.