TNPSC Thervupettagam

கர்னூல் விமான நிலையம் – ஆந்திரப் பிரதேசம்

March 29 , 2021 1246 days 724 0
  • மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் YS ஜகன்மோகன் ரெட்டி ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தில்  ஓர்வக்கல் என்ற இடத்தில் கர்னூல் விமான நிலையத்தைத் திறந்து வைத்தனர்.
  • கடப்பா, விசாகப் பட்டினம், திருப்பதி, இராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ஆகியவற்றையடுத்து ஆந்திர மாநிலத்தில் ஆறாவது விமான நிலையமாக கர்னூல் செயல்பட உள்ளது.
  • கர்னூல் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் (Ude Desh Ka Aam Nagrik – (RCN – UDAN) தொடங்கப்படும்.
  • பெங்களூரு, விசாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளுக்கான நேரடி விமானப் பயணச் சேவை இந்தப் பகுதியினை தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும்.
  • இந்தப் பாதைகளுக்கு 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற UDAN – 4 என்ற திட்டத்தின்  ஏல முறையின் கீழ் பயணியர் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

கர்னூல்

  • கர்னூல் ஆந்திரப் பிரதேசத்தின் நீதித் தலைநகரம் ஆகும்.
  • கர்னூல் நகரம் துங்கபத்திரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
  • அதற்கிணையாக நல்லமலைத் தொடர் செல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்