பஞ்சாப் மாநில அரசானது, கலப்பின நெல் விதைகள் (பாஸ்மதி வகை சாராத அரிசி வகை) மாநிலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி அதன் விற்பனையைத் தடை செய்துள்ளது.
இந்திய உணவுக் கழகம் (FCI) நிர்ணயித்தத் தரங்களுடன் ஒப்பிடும்போது, இந்த நெல் மணிகளை ஆலையில் அரைக்கும் போது மிக அதிக சதவீத அளவில் நொய் அரிசிகள் உருவாகின்றன.
பஞ்சாபில் சாகுபடிக்காக அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்ட எட்டுக் கலப்பின நெல் வகைகள் உள்ளன.
சவன்னா, VNR, கோர்டேவா மற்றும் பேயர் போன்ற சில தனியார் விதை நிறுவனங்கள் மாநிலத்தில் இந்த அங்கீகரிக்கப்பட்ட கலப்பினங்களை விநியோகிக்கின்றன.
பொதுவாக வளர்க்கப்படும் சில வகைகளில் சவா 127, சவா 134, சவா 7501, 27P22, VNR 203 மற்றும் இதர வகைகள் அடங்கும்.