TNPSC Thervupettagam

கலாம்சாட்-V2 – எடைகுறைந்த செயற்கைக்கோள்

January 27 , 2019 2002 days 749 0
  • இஸ்ரோ ஆனது ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து நான்கு நிலைகளைக் கொண்ட துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனத்தின் (Polar Satellite Launch Vehicle - PSLV) மூலம் கலாம்சாட்-V2 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியுள்ளது.
  • இச்செயற்கைக் கோளானது முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் இந்திய விஞ்ஞானியான டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
  • இது இதுவரை வடிவமைக்கப்பட்டிராத மற்றும் புவிவட்டப்பாதைக்கு அனுப்பப்படாததுமான குறைந்த எடை கொண்ட செயற்கைக் கோளாகும். மேலும் இது தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு செலுத்தப்பட்ட இஸ்ரோவின் முதலாவது செயற்கைக் கோளாகும்.
  • இது வணிகமற்ற நடவடிக்கைகளுக்காக தொழில்சாரா அமைப்பினரால் பயன்படுத்தப்படும் கம்பியில்லா தொடர்பின் ஒரு வடிவமான ஹாம் கதிர்வழி அலை செலுத்துகைக்கான தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
  • இச்செயற்கைக் கோளானது சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் விண்வெளிக் கல்வி நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இச்செயற்கைக்கோளின் மதிப்பு இந்திய மதிப்பில் 1.2 மில்லியன் ஆகும். இச்செயற்கைக்கோள் 6 நாட்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரோவானது இந்த ஏவுதலின் மூலம் பயனற்ற செயற்கைக்கோளின் நிலையை மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. விண்வெளியில் சிறிய அளவிலான ஆய்வுகளை நடத்துவதற்காக செயற்கைக் கோளின் 4-வது நிலையை சோதனை சுற்றுவட்டப்பாதைத் தளமாக மாற்றி ஒரு புதிய முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்