ஒடிசா மாநிலமானது சமீபத்தில் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை அதிகப்படுத்துவதற்கான க்ருஷாக் உதவித் திட்டம் (KALIA - Krushak Assistance for Livelihood and Income Augmentation) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இது சிறு, குறு, நிலமற்ற விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி காரிப் மற்றும் ராபி பருவங்களில் தலா 5000 ரூபாய் என மொத்தமாக 10000 ரூபாய் சாகுபடி செய்வதற்கான நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் அளிக்கப்படும்.
2018 - 19 ஆம் ஆண்டு முதல் 2021 - 22 வரை மூன்று ஆண்டுகளின் 5 பயிர் பருவங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.
இது நேரடி பயன் பரிமாற்ற (DBT - Direct Benefit Transfer) முறையில் செயல்படுத்தப்படும்.