TNPSC Thervupettagam

கலைகளுக்கான உலக ஒலிம்பிக்

February 16 , 2018 2476 days 772 0
  • 8-வது மேடைக் கலைகளுக்கான உலக ஒலிம்பிக் (Global Theatre Olympics) புதுதில்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • உலக மேடைக் கலைகளின் (theatrical arts) பிரம்மாண்ட காட்சித் தளமான இது இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட உள்ளது.
  • மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்டும் தேசிய நாடகப்பள்ளி (National School of Drama) இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருக்கின்றது.
  • இந்த 8-வது மேடைக் கலைகளுக்கான உலக ஒலிம்பிக்கின் கருத்துரு – “நட்புறவிற்கான கொடி” (Flag of Friendship) .
  • 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 25,000 சர்வதேசக் கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
  • “ஒரே பாரதம் சிறந்த பாரதம்” (EK Bharat Shreshtha Bharat) என்பதை கருப்பொருளாக கொண்டு இந்தியா சார்பாக சுவாங்க் (Swang), ராஸ்லீலா (Rasleela), நவ்தன்கி (Nautanki), பந்த் பாதர் (Bhand Pather), ஜட்ரா (Jatra) போன்ற கலைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
  • மேடைக் கலைகளுக்கான உலக ஒலிம்பிக் நிகழ்ச்சியானது 1993 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் டெல்பியில் (Delphi) தொடங்கப்பட்டது.
  • மேடைக் கலை (theatrical art) எனும் ஊடகம் மூலம் வெவ்வேறு கலாச்சாரம், நம்பிக்கை ,சிந்தனையுடைய மக்களை ஒரு இடத்தில் கூட்டுவதும், எல்லைகளின் இடைவெளியை குறைத்து உறவுப்பாலம் அமைப்பதும் இதன் நோக்கங்களாகும்.

தேசிய நாடகப் பள்ளி

  • தேசிய நாடகப் பள்ளி மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேடை கலைப் பயிற்சிக்கான ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்.
  • இது புதுதில்லியில் அமைந்துள்ளது.
  • 1959 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி (Sangeet Natak Akdemi) ஆல் இது தோற்றுவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்