தமிழக முதல்வர் 'கலைஞர் கைவினைத் திட்டம்' என்ற கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது மத்திய அரசின் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்திற்கான ஒரு மாற்றாக மாநில அரசின் ஒரு திட்டமாக செயல்படும்.
இது மிகவும் உள்ளடக்கிய ஒரு வகையிலான, விரிவான, மேலும் சாதி அடிப்படையில் பாகுபாடு கொண்டிராத திட்டமாக இருக்கும்.
இந்தத் திட்டமானது 25 தொழில்களை உள்ளடக்கியது என்பதோடு கூடுதலாக யார் வேண்டுமானாலும் தங்கள் விருப்பப்படி ஒரு தொழிலைத் தொடரலாம்.
கலைஞர் கைவினைத் திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 35 வயது ஆகும்.
இதில் அரசானது மானியத்துடன் சேர்த்து 50,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களை வழங்கும்.
2023 ஆம் ஆண்டில், மத்திய அளவில் மத்திய அரசானது விஸ்வகர்மா திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டம் ஆனது, 18 தொழில்களை உள்ளடக்கியதாகவும், திறன் மேம்பாடு மற்றும் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.