TNPSC Thervupettagam

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – வழிகாட்டுதல்கள்

July 9 , 2023 506 days 1638 0
  • ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான செயல் பாட்டு வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • இத்திட்டமானது, இந்தியாவில் இவ்வகையிலான முதல் திட்டமாகக் கருதப்படுகிறது.
  • இது முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ளது.
  • 21 வயது பூர்த்தியடைந்த பெண்கள் (2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள்) இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
  • இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான மற்ற அளவுருக்கள்:
    • குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பம்.
    • 5 ஏக்கர் (நன்செய் நிலம்) மற்றும் 10 ஏக்கர் (புன்செய் நிலம்) ஆகியவற்றிற்கு மிகாமல் குடும்ப நிலம் வைத்திருப்போர்.
    • 3,600 அலகுகளுக்குக் குறைவான வீட்டு உபயோகத்திற்கான மின்சார நுகர்வு.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்ற நபர்கள்:
    • குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் உள்ள பெண்கள் மற்றும் வருமான வரி மதிப்பீடு செய்பவர்கள்.
    • 2.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் மற்றும் தொழில் முறை வரி செலுத்துபவர்கள்
    • மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழியர்கள்/ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தவிர),
    • தனிப்பட்டப் பயன்பாட்டிற்காக மகிழுந்துகள், ஜீப்கள், இழுவை வண்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியற்ற நபர்கள் ஆவர்.
    • “முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், முறைசாராத் துறையினருக்கான நல வாரியத்தின் ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இருந்து உதவி பெறும் குடும்பங்கள்.
  • இத்திட்டத்திற்காக நிதிநிலை அறிக்கையில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்