TNPSC Thervupettagam

கலைமாமணி விருதுகள் 2011 – 18

August 14 , 2019 1932 days 844 0
  • 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுகளை கலைஞர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார்.
  • மேலும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பெயரில் “சிறப்புமிக்க 3 கலைமாமணி விருதுகள்” ஏற்படுத்தப்பட்டு, அவை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
  • மூத்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் தொகையானது ரூ.2000லிருந்து ரூ.3000 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • கலைமாமணி விருதுகளுக்காக 72 வெவ்வேறு கலைப் பிரிவுகளிலிருந்து 201 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறப்பு நிதித் தொகையைப் பெறுவதற்காக 8 மூத்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விருதின் பெயர்
புகழ்பெற்ற ஆளுமைகள்

பாரதி விருது

எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் வில்லுப்பாட்டு நிபுணர்  சுப்பு ஆறுமுகம்

பாலசரஸ்வதி விருது

நடனக் கலைஞர்கள் C.V. சந்திரசேகர், வைஜெயந்திமாலா பாலி, V.P. தனஞ்ஜெயன் மற்றும் சாந்தா தனஞ்ஜெயன்

எம்.எஸ். சுப்புலட்சுமி விருது

கர்நாடக இசைக் கலைஞர்கள் C. சரோஜா & C. லலிதா (மும்பை சகோதரிகள்) மற்றும் T.V. கோபால கிருஷ்ணன்

திரைப்பட இசையமைப்பாளர்கள்

யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி

திரைப்பட நடிகர்கள்

விஜய்சேதுபதி, கார்த்தி, எம்.எஸ். பாஸ்கர், சசிக்குமார், பாண்டியராஜன், தம்பி ராமையா, ஸ்ரீகாந்த், நளினி மற்றும் சூரி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்