TNPSC Thervupettagam

கலைமாமணி விருதுகள்

March 1 , 2019 1968 days 678 0
  • 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு 8 எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழக அரசு கலைமாமணி விருதுகளை அறிவித்திருக்கின்றது.
  • தமிழ் கலாச்சாரத்திற்குப் பங்களிப்புகளை அளித்த நடிகர்கள், நடனக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
  • இம்முறை விஜய் சேதுபதி, கார்த்தி மற்றும் பிரபுதேவா போன்ற திரை நடிகர்கள் உள்பட 201 கலைஞர்கள் இவ்விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.
  • மேலும் அரசு இலக்கியத் துறையில் பாரதி விருதுகளையும், இசைத் துறையில் M.S. சுப்புலட்சுமி விருதுகளையும், நடனத் துறையில் பால சரஸ்வதி விருதுகளையும் அறிவித்தது.
  • M.S. சுப்புலட்சுமி விருதிற்காக பாடகர்கள் S. ஜானகி, பம்பாய் சகோதரிகளான சி. சரோஜா மற்றும் சி. லலிதா மற்றும் T.V. கோபால கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
  • பாரதி விருதிற்காக பாடலாசிரியர் புலமைப்பித்தன், புகழ்பெற்ற வில்லுப்பாட்டுக் கலைஞரும் பாடலாசிரியருமான சுப்பு ஆறுமுகம் மற்றும் எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான சிவசங்கரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
  • பால சரஸ்வதி விருதிற்காக வைஜயந்தி மாலா, V.P. தனஞ்செயன் மற்றும் C.V. சந்திரசேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்