நடனம் மற்றும் இசை ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மீதான திறமை மற்றும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக கலாச்சாரத் துறையில் பல்வேறு விருதுகளை அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஸ்ரீமனாதா சங்கர்தேவ் விருது 2017
அஸ்ஸாம் மாநிலத்தின் சத்திரியா நடனம், இசை மற்றும் நாட்டுப்புறக் கலாச்சாரம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு பணியாற்றியதற்காக பார்பெட்டா சத்தராவின் சத்திரியப் பிரதிநிதியான புகழ்பெற்ற பசிஸ்ததேவ் சர்மாவிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் மயமோரா டின்ஜோய் சதாராவில் கையெழுத்துப் பிரதியை பாதுகாப்பதற்காகவும் தேசிய அளவில் சத்திரிய நடனம் மற்றும் இசையை அங்கீகரிப்பதற்காகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றார்.
மாதவ்தேவ் விருது 2019
இவ்விருதானது புகழ்பெற்ற நடனக் கலைஞர், வரலாற்று அறிஞர், விமர்சகர் மற்றும் அறிஞரான டாக்டர் சுனில் கோத்தாரிக்கு வழங்கப்படவிருக்கிறது.
இவர் பாரம்பரிய நடனத்தின் பல்வேறு வடிவங்கள் மற்றும் அது சார்ந்த வடிவங்கள் குறித்த தனது 12 புத்தகங்களின் மூலம் நாட்டின் கலாச்சாரத் துறையை மேம்படுத்தினார்.