TNPSC Thervupettagam

கல்கா-சிம்லா பாரம்பரிய இரயில் பாதை

August 22 , 2023 333 days 213 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வரலாற்றுச் சிறப்புமிக்க 94 கி.மீ. நீள கல்கா-சிம்லா இரயில் பாதை சிதிலமடைந்தது.
  • கல்கா-சிம்லா இரயில் பாதையானது 1903 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப் பட்டது.
  • தற்போது, இந்த வழித்தடத்தில் அமைந்த 20 இரயில் நிலையங்களுக்கு இடையே 102 சுரங்கங்களும் 919 வளைவுகளும் உள்ளன.
  • இந்த இரயில் பாதை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளத்தின் கீழ் இந்தியாவின் மலை இரயில் தடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது டார்ஜிலிங் இமாலய இரயில் தடம் மற்றும் நீலகிரி மலை இரயில் தடம் ஆகிய இரண்டு நிலையங்களுடன் இந்த பெருமையினைப் பகிர்ந்து கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்