திருநர்கள் ஆர்வலர் கல்கி சுப்பிரமணியம் அவர்கள், தேசிய திருநர்கள் சபையின் தெற்குப் பிராந்தியத்தின் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் இக்குழுவின் பதவி வழித் தலைவராக உள்ளார்.
ஷ்ரத்தா A. ஜோஷி (மேற்குப் பிராந்தியம்), சோபா தாகூர் (வடக்குப் பிராந்தியம்), வித்யா (கிழக்குப் பிராந்தியம்) மற்றும் ரித்துபர்னா நியோக் (வடகிழக்குப் பிராந்தியம்) ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ள இதர திருநர் பிரதிநிதிகள் ஆவர்.
அபினா அஹர், ரவீணா பரிஹா, சாதனா மிஸ்ரா, அபர்ணா லலிங்கர், மற்றும் கிதி தாதனி ஆகிய ஐந்து வல்லுநர்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.