கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது இறுதி நிலை கல்லீரல் செயலிழப்புக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகிச்சையாகும். மேலும் இது நோயாளியின் கடைசிக் கட்ட சிகிச்சையாகும்.
ஹைப்போதெர்மிக் ஆக்ஸிஜனேற்றப்பட்ட பெர்ஃப்யூஷனின் (Hypothermic Oxygenated Perfusion - HOPE) வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையின் ஆண்ட்ரியா ஷ்லெகல் என்பவர் MIOT இன்டர்நேஷனல் நிறுவனத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் உரையாடினார்.
ஹைப்போதெர்மிக் ஆக்ஸிஜனேற்றப்பட்ட பெர்ஃப்யூஷனின் மூலம் விளிம்பு அல்லது அதிக ஆபத்துள்ள நன்கொடையாகப் பெறப்பட்ட கல்லீரல்களை இடமாற்றம் செய்ய முடியும்.
உறுப்பு தானம் செய்பவரிடமிருந்து கல்லீரல் அகற்றப் படும்போது ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால், அந்த பாதிப்பைச் சரி செய்வதற்கு இந்த இயந்திரம் உதவுகின்றது.