கல்வராயன் மலைகளில் அதிகப்படியான சுரண்டல் நடவடிக்கைகள்
August 27 , 2024 88 days 173 0
1976 ஆம் ஆண்டில் மாநில அரசினால் கையகப் படுத்துவதற்கு முன்னதாக கல்வராயன் மலைகள் அதன் மூன்று ஜாகிர்தார்களால் (குறு ஆட்சியாளர்கள்) அதிகமாகச் சுரண்டலுக்குள்ளாக்கப் பட்டன.
இது கிழக்குத் தொடர்ச்சி மலையில் 78,000 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.
கல்வராயன் மலைகள் கள்ளக் குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியிருந்தன.
அவை 600 முதல் 900 மீட்டர் வரையிலான உயரத்தினைக் கொண்டுள்ளன.
இந்த மலைப் பகுதிகள் ஆனது ஜடாயக் கவுண்டன், ஆரியக் கவுண்டன் மற்றும் குரும்ப கவுண்டன் ஆகிய ஜாகிர்தாரர்களால் நீண்ட காலமாக ஆட்சி செய்யப் பட்டன.
ஆனால் 1963 ஆம் ஆண்டின் இனாம் நிலச் சட்டங்கள் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம் ஆனது ஜாகிர்தாரர் முறைகளை ஒழிப்பதற்காக கொண்டு வரப் பட்டது.
1963 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் கல்வராயன் மலைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசானது 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அன்று ஆணை பிறப்பித்தது.
அவ்வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு, இறுதியாக 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று நிலங்களை அரசு மீண்டும் கையகப்படுத்திய போது தான் அதன் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த மலைப் பகுதிகளில் சுமார் 20,000 மக்கள் வாழ்ந்தனர்.