ஜெர்மனியில் உள்ள ப்ரீட்ரிக் அலெக்சாண்டர் என்ற பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் நிறுவனம் மற்றும் சுவீடன் நாட்டின் ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமான வி-டெம் ஆகியவை இந்த அறிக்கையினைத் தொகுத்துள்ளன.
ஐந்து முக்கியக் குறிகாட்டிகளை மதிப்பிடுவதன் மூலம் 179 நாடுகளில் உள்ள கல்வி சார் சுதந்திரம் குறித்தக் கண்ணோட்டத்தை இந்த அறிக்கை வழங்குகிறது.
2022 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 179 நாடுகளில் இந்தியாவின் கல்வி சார் சுதந்திரக் குறியீடு ஆனது இந்தக் குறியீட்டில் கீழ் நிலையில் உள்ள 30% நாடுகளில் இடம் பெற்று உள்ளது.
179 உலக நாடுகளில் இந்த நிலையை அடைந்த 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் (0.86), பாகிஸ்தான் (0.45) மற்றும் பூடான் (0.46) ஆகிய நாடுகள் இந்தியாவை விட அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ள நிலையில், வங்காள தேசம் (0.25) மற்றும் மியான்மர் (0.01) ஆகியவை இந்தியாவை விட குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
முந்தையக் காலங்களில் அதாவது 1950 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் சுதந்திரக் குறியீட்டின் மதிப்பெண் ஆனது 0.60-0.70 என்ற அளவில் அதிகமாக இருந்தது.
இதில் ஐந்து சிறிய நாடுகள் மட்டுமே (காம்பியா, உஸ்பெகிஸ்தான், செசல்ஸ், மாண்டினீக்ரோ மற்றும் கஜகஸ்தான்) தங்கள் தரவரிசைகளை மேம்படுத்தியுள்ளன.