TNPSC Thervupettagam

கல்விப் பட்டங்களுக்குப் புதிய பெயர்கள்

June 14 , 2023 405 days 241 0
  • பல்கலைக்கழக மானியக் குழுவானது, உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்லூரிப் பட்டங்களுக்கான புதியப் பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கல்வித் துறையைப் பொருட்படுத்தாமல், அனைத்து நான்கு ஆண்டு கால இளங்கலைப் படிப்புகளுக்கும் இளங்கலை அறிவியல் (BS) பட்டங்களை வழங்குவதற்கு வேண்டி இது பரிந்துரைத்துள்ளது.
  • பல்கலைக் கழகங்கள் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு என்று முதுகலை அறிவியல் (MS) என்ற பெயர் முறையினை பின்பற்றலாம் என்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • கலை, மானுடவியல், மேலாண்மை மற்றும் வணிகம் போன்ற அறிவியல் சாராத கல்விப் பிரிவுகளுக்கும் இது பொருந்தும்.
  • நான்காண்டு கால இளங்கலை மேதகைமைப் படிப்புகளுக்கு ‘மேதகைமைப் பட்டம்' என்ற அந்தஸ்தினை அறிமுகப்படுத்தவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • நான்காண்டு கால இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கு BA (Hons), BCom (Hons), அல்லது BS (Hons) போன்று அடைப்புக் குறிக்குள் ‘மேதகைமைப் பட்டம்' குறிப்பிடப் படும்.
  • இந்தியாவில் வழக்கமாக, இளங்கலை அறிவியல் (BSc) பட்டப்படிப்புகள் அறிவியல் பாடங்களுடன் தொடர்புடையவை ஆகும்.
  • மேலும், இளங்கலை (BA) பட்டப்படிப்புகள் கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றினை உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்