TNPSC Thervupettagam

கல்வியில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம்

August 2 , 2024 117 days 157 0
  • பெரும்பாலான குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஒவ்வோர் ஆண்டும் பருவநிலை தொடர்பான பள்ளிச் செயல்பாட்டு முடக்கங்களை எதிர் கொண்டு வருகின்றன என்ற நிலையில்  இதனால் கற்றலில் இழப்பு மற்றும் பள்ளிக் கல்வி இடை நிறுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
  • பருவநிலை மாற்றம் ஆனது மக்களைப் புலம் பெயரச் செய்வதன் மூலமும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மூலமும் கல்வியில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
  • கடந்த 20 ஆண்டுகளில், குறைந்தபட்சம் 75% தீவிர வானிலை நிகழ்வுகளில் பள்ளிகள் மூடப் பட்டன என்ற நிலையில் இது சுமார் ஐந்து மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களைப் பாதித்தது.
  • அமெரிக்காவில், குளிரூட்டல் வசதி இல்லாமல், ஒரு பள்ளி ஆண்டு 1 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பமாக இருந்தது என்ற நிலையில் தேர்வு மதிப்பெண்களில் 1% குறைப்பிற்கு இது வழி வகுத்தது.
  • 2022 ஆம் ஆண்டில், பல பேரிடர்கள் காரணமாக 32.6 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தனர்.
  • இந்தியாவில் மழைப் பொழிவானது, ஒரு குழந்தையின் முதல் 15 ஆண்டுகளில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
  • இது ஐந்து வயதில் மொழிசார் மற்றும் 15 வயதில் கணிதம் மற்றும் அறிவாற்றல் சாராத திறன் கற்றலில் எதிர்மறையானத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்