நாட்டில் பள்ளிக் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய கேபினெட் அனுமதியளித்துள்ளது. இச்சீர்திருத்தங்கள், சர்வ சிக்ஸா அபியான் - 2 திட்டத்தில் செய்யப்பட்ட உள்ளன.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA), தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (Rashtriya Madhyamik Shiksha Abhiyan) மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகிய அனைத்தும் ஒரே திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
இந்த ஒருங்கிணைக்கப்பட்டத் திட்டம் ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரை அமலில் இருக்கும். இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.75,000 கோடி (தற்போதைய அளவை விட 20% கூடுதலாகும்) ஆகும்.
அரசு, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது கவனம் செலுத்தும்.
திறன் பயிற்சி, தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை செயல்பாட்டில் உள்ளது. வரும் நாட்களில் இப்பயிற்சி 6ஆம் வகுப்பு முதல் செயல்படுத்தப்படும். இத்திறன் பயிற்சி மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
அதிக கட்டணம் வசூலிக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண நிதி அளவுகளுடன் (Modest Financial means) வட்டியில்லா கல்விக் கடன்கள் வழங்குதலை அதிகரிப்பதற்கும் கேபினேட் அனுமதியளித்துள்ளது.