TNPSC Thervupettagam

கல்வி பற்றிய UNICEF அமைப்பின் அறிக்கை

February 23 , 2025 11 hrs 0 min 26 0
  • கற்றலில் குறுக்கீடுகள்: 2024 ஆம் ஆண்டில் பருவநிலை தொடர்பான பள்ளிக் கல்வி பெறுவதில் இடையூறு குறித்த உலகளாவிய அறிக்கையானது UNICEF அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் பருவநிலை நிகழ்வுகள் காரணமாக, முன்னிடைப் பள்ளிக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையிலான குறைந்தபட்சம் 242 மில்லியன் மாணவர்கள் பள்ளிக் கல்வி பெறுவதில் இடையூறுகளை எதிர் கொண்டுள்ளனர்.
  • இந்த அறிக்கையானது, பள்ளிக் கல்வி பெறுவதில் இடையூறுகளுக்கு வழி வகுத்த 119 பருவநிலை இடர்களை அடையாளம் கண்டுள்ளது.
  • வெப்ப அலைகளானது பள்ளிக் கல்வி பெறுவதில் மிக அதிகளவில் இடையூறுகளை ஏற்படுத்தி, குறைந்த பட்சம் சுமார் 171 மில்லியன் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை பாதித்தது.
  • ஏப்ரல் மாதத்தில் மட்டும் 118 மில்லியன் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • வங்காளதேசம், கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய சில நாடுகளில் பதிவான தேசிய அளவிலான பள்ளி இடையூறுகள் என்பது, சுமார் 63 மில்லியனுக்கும் அதிகம் என்ற அளவில் குழந்தைகளின் பள்ளிப் படிப்பைப் பாதித்தன.
  • செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட சில வெப்ப மண்டலப் புயல்கள் சுமார் 18 மில்லியன் மாணவர்களின் பள்ளிப் படிப்பை பாதித்தன.
  • ஜிம்பாவேயில், 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நீடித்த வறட்சி ஆனது சுமார் 1.8 மில்லியன் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை பாதித்தது.
  • 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பருவநிலை தொடர்பான பள்ளி இடையூறுகளால் சுமார் 127,845,148 மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதால், மிகவும் பாதிக்கப்பட்டப் பகுதியாக தெற்காசியா உள்ளது.
  • இதில் பெரும்பான்மையானப் பாதிப்பு (54 மில்லியன்) இந்தியாவில் பதிவாகியுள்ளது என்ற ஒரு நிலையில் அவர்களில் பெரும்பாலோர் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதோடு இது வங்காளதேசத்தில் சுமார் 35 மில்லியன் மாணவர்களையும் பாதித்தது.
  • மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியன முதன்மையாக வெள்ளம் தொடர்பான இடையூறுகளை எதிர் கொண்டு முறையே 12 மில்லியன் மற்றும் 8 மில்லியன் மாணவர்களின் பள்ளிப் படிப்பைப் பாதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்