TNPSC Thervupettagam

களைக்கொல்லி தாங்கு திறனுடைய பருத்தி

March 14 , 2018 2451 days 891 0
  • ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் களைக்கொல்லி தாங்குத் திறனுடைய பருத்தியான (Herbicide tolerant – HT) BG-III பருத்தியின் சட்ட விரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத சாகுபடியை விசாரிப்பதற்காக மத்திய அரசு ஓர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
  • இதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology) கள ஆய்வு மற்றும் அறிவியல்பூர்வ மதிப்பீட்டுக்  குழுவை (Field Inspection and Scientific Evaluation Committee -FISEC) அமைத்துள்ளது.
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபுப் பொறியியல் மதிப்பீட்டுக்குழுவால் (Genetic Engineering Approval Committee - GEAC) இதுவரை HT பருத்தியின் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
  • அனுமதிக்கப்படாத HT பருத்தியின் வணிக ரீதியிலான உற்பத்தி, விற்பனை, சாகுபடி, மற்றும் அதன் விதை உற்பத்தி ஆகியவை 1968 ஆம் ஆண்டின் விதை விதிகள் (Seed Rules 1968) மற்றும் 1966-ன் விதைகள் சட்டம் (Seed Act 1966),  1983-ன் விதைகள் கட்டுப்பாட்டு உத்தரவு, 1986-ன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1989ன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள், ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியக் குற்றமாகும்.
  • HT பருத்தியானது BG-III பருத்தி எனவும் அழைக்கப்படுகின்றது.
  • BT பருத்தியில் (Bt Cotton) மேற்கொள்ளப்பட்ட ஓர் படைப்பாக்கமே BG-III பருத்தியாகும். இது Roundup Ready மற்றும் Roundup Flex (RRF) ஜீன்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்