கள்ள நோட்டுகள் மீதான தேசிய மாநாடு & அமலாக்க நிறுவனங்களின் பங்கு
March 15 , 2018 2450 days 766 0
அமலாக்க நிறுவனங்களின் பங்கு மற்றும் கள்ளநோட்டுகள் மீதான தேசிய மாநாடு அண்மையில் புது டெல்லியில் நடைபெற்றது.
அறிவுசார் சொத்துரிமையின் மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கானப் பிரிவு (CIPAM - Cell for IPR Promotion and Management) ஐரோப்பிய யூனியனுடன் (European Union-EU) இணைந்து இம்மாநாட்டை நடத்தியுள்ளது.
இன்னும் மேம்பட்ட வகையில் அறிவுசார் சொத்துரிமையின் பாதுகாப்பு சூழலமைவை வலுப்படுத்த, புதிய யோசனைகளை வழங்கவும், அதன் மீது பேச்சுவார்த்தையை நடத்தவும் அறிவுசார் சொத்துரிமை களத்தில் உள்ள தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களை ஓரே மேடையில் ஒருங்கிணைப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
CIPAM
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் (Ministry of commerce and Industry) தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் (DIPP- Department of Industrial Policy & Promotion) கீழ் செயல்படும் தொழில்முறை அமைப்பே (Professional body) CIPAM ஆகும்.
“படைப்பாக்க இந்தியா; புத்தாக்க இந்தியா” (Creative India; Innovative India) என்ற முழக்கத்தோடு (slogan) 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கையை (IPR Policy) திறம்பட அமல்படுத்துவதே CIPAM-ன் முக்கிய பணியாகும்.