TNPSC Thervupettagam

கழிவுநீர் அகற்றும்போது ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடல் குறைபாடுகள் தொடர்பான இழப்பீடு

October 29 , 2023 266 days 180 0
  • மனிதர்களால் மேற்கொள்ளப்படும் கழிவுநீர் அகற்றுதல் நடைமுறையினை படிப் படியாக முழுவதும் ஒழிப்பதை உறுதி செய்வதற்காக வேண்டி உரிய நடவடிக்கைகளை எடுக்கவும், கொள்கைகளை வகுக்கவும், வழிமுறைகளை வழங்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
  • மேலும், கழிவுநீர் குழாய்களைச் சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் உறவினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளானது 30 லட்சம் ரூபாயினை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
  • இதற்கு முன்னதாக 1993 ஆம் ஆண்டில் இருந்து 10 லட்சம்  ரூபாயானது இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.
  • கழிவுநீர் சுத்திகரிக்கும் போது ஏதேனும் ஒரு வகை உடல் ஊனத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப் படும் குறைந்தபட்ச இழப்பீடானது 10 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக இருத்தல் கூடாது.
  • அவ்வாறு ஏற்படும் குறைபாடானது, நிரந்தர இயலாமை மற்றும் பொருளாதார ரீதியாக ஆதரவற்றவர்களாக ஒருவரை மாற்றினால், அதற்காக வழங்கப்படும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகையானது 20 இலட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருத்தல் கூடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்