கழிவுகளிலிருந்து மதிப்புமிக்கப் பொருட்களை உருவாக்குதல்: இந்தியாவின் நகர்ப்புற நீர் நெருக்கடியை கழிவு நீர் மறுபயன்பாட்டின் மூலம் மேலாண்மை செய்தல் என்ற அறிக்கையானது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) மற்றும் தேசிய கங்கை தூய்மை திட்டம் (NMCG) ஆகியவற்றினால் கூட்டாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது தினசரி உற்பத்தியாகும் 72,000 மில்லியன் லிட்டர் கழிவுநீரில் 28 சதவீதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது.
நகரங்களில் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் குறைந்தது சுமார் 20 சதவீதத்தினை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று ஜல் சக்தி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் அளவுகளின் அடிப்படையில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, இராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஹரியானா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், பல மாநிலங்கள் முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்தியுள்ளன.
தமிழ்நாடானது தொழில்துறை மற்றும் நகர்ப்புற பசுமையாக்கல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
நாக்பூர், பெங்களூரு மற்றும் சென்னை போன்ற நகரங்கள் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான வெற்றிகரமான உதாரணங்களாக உள்ளன.
நாக்பூர் அரசானது, மின் உற்பத்தி நிலையங்களுக்கு சுத்திகரிக்கப்பட்டக் கழிவுநீரை வழங்கி, அவற்றில் நன்னீர் பயன்பாட்டினைக் குறைத்துள்ளது.