TNPSC Thervupettagam

கழுகுகளின் உணவகம் – ஜார்க்கண்ட்

January 21 , 2024 342 days 285 0
  • கோடெர்மா மாவட்டத்தில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • கால்நடைகளில் குறிப்பிட்ட மருந்துப் பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப் படுவதால், இந்தப் பறவை இனங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கோசாலைகள் (பசுக் காப்பகம்) மற்றும் நகராட்சிகளில் டைக்ளோஃபினாக் இல்லாத விலங்குகளின் சடலங்களை வழங்கச் செய்வதற்கான நெறிமுறை தயாரானவுடன் இந்த உணவகம் செயல்படத் தொடங்கும்.
  • கோசாலைகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து வரும் கால்நடைகளின் சடலங்கள், 'கழுகுகளின் உணவகம்' என்ற வரையறுக்கப்பட்ட உணவளிக்கும் இடத்தில், (இறந்த விலங்குகளை உண்ணும்) பறவைகளுக்கு உணவாக வழங்கப்படும்.
  • இந்தப் பறவைகளுக்கு உணவளிக்கும் இடமாக கருதப்படுவதால், திலையா நகர் பரிஷத்தின் கீழ் உள்ள குமோவில் கோடெர்மா ‘கழுகுகளின் உணவகம்'   நிறுவப்பட்டு உள்ளது.
  • கோடெர்மாவில் சுமார் இருபது ஆண்டுகளாக கழுகுகள் காணப் படவில்லை.
  • அவை 2019 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் மீண்டும் தென்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்