TNPSC Thervupettagam

கழுதையின் தோல் வர்த்தகத்திற்குத் தடை

April 3 , 2024 107 days 120 0
  • ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையமானது (AUC), வணிக ரீதியானப் பயன்பாட்டிற்காக கழுதைகள் அவற்றின் தோலுக்காக கொல்லப்படுவதற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு காலத் தடைக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற முதல் AU-IBAR வாரியத்தின் முழு ஆப்பிரிக்க அளவிலான கழுதை தொடர்பான  மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட டார் எஸ் சலாம் பிரகடனத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும்.
  • எஜியாவோ எனப்படும் ஒரு பாரம்பரிய சீன மருந்தினைத் தயாரிப்பதற்காக கழுதை தோல் பயன்படுத்தப்படுகிறது.
  • 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டு காலங்களில், எஜியாவோ மருந்தின் உற்பத்தி 160 சதவீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • சமீபத்தில் சீனாவில் நிலவும் இந்த மருந்திற்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எஜியாவோ தொழிற்துறைக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் சுமார் 5.9 மில்லியன் கழுதைத் தோல் தேவைப்படுகிறது.
  • உலகம் முழுவதும் உள்ள 53 மில்லியன் கழுதைகளில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கையிலான கழுதைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்