மனிதர்களால் கவரிமா (காட்டு எருது) வளர்க்கப்பட்டது பற்றிய மிகப் பழமையான சான்று திபெத்திய தன்னாட்சிப் பகுதியான பாங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யர்லுங்-சாங்போ (பிரம்மபுத்ரா) நதிக்கரையில் அமைந்துள்ள பாங்காவில் வாழ்ந்த மனிதர்கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு டாரைன் என்ற வகையைச் சேர்ந்த பசுக்களையும், காட்டு எருதுகளையும் வளர்த்தனர்.
பாங்கா கடல் மட்டத்திலிருந்து தோராயமாக 3,750 மீட்டர் (12,300 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
காட்டு கவரி எருதுகள் என்பவை தற்போது IUCN அமைப்பினால், "பாதிக்கப்படக்கூடிய இனங்களாக" பட்டியலிடப்பட்டுள்ளன.
காடுகளில் 7,500 முதல் 10,000 எண்ணிக்கையிலான எருதுகளே தற்போது உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.