TNPSC Thervupettagam

கஹிர்மாதா கடற்கரையில் ஆலீவ் ரிட்லி ஆமைகள்

March 13 , 2021 1228 days 560 0
  • ஆலீவ் ரிட்லி ஆமைகள் ஒடிசாவின் கேந்திரபரா மாவட்டத்தில் உள்ள கஹிர்மாதா கடற்கரையில் இருக்கும் தங்கள் அடைகாக்கும் தளத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளன.
  • இந்த இடமானது முட்டை இடுவதற்காக இந்த உயிரினங்களின் உலகின் மிகப்பெரிய முட்டையிடும் இடமாகக் கருதப்படுகின்றது.
  • இந்தக் கூறானது “அரிபடா” (ஸ்பெயின் மொழி) என்று அழைக்கப்படுகின்றது.
  • “அரிபடா” ஆனது முட்டைகள் இடுவதற்காக அடைகாக்கும் தளத்திற்கு ஒன்றாக வரும் மில்லியன் கணக்கிலான இந்தக் கடல்சார் இனங்களின் தனித்துவ இயற்கைப் பாரம்பரியத் தளம் என்பதைக் குறிப்பிடுகின்றது.
  • ஆலீவ் ரிட்லி ஆமைகள் பொதுவாக 120 முதல் 150 முட்டைகளை இடும். இந்த முட்டைகளிலிருந்து 45 முதல் 50 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்