TNPSC Thervupettagam

காங்கோ காய்ச்சல் மீதான எச்சரிக்கை

October 9 , 2020 1418 days 546 0
  • மகாராஷ்டிராவின் பால்ஹர் மாவட்டமானது குஜராத்தில் உள்ள அதன் அண்டை மாவட்டங்களில் காங்கோ காய்ச்சல் வைரஸ் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • கிரீமியன் – காங்கோ ஹிமோராகிக் காய்ச்சலானது (Crimean-Congo hemorrhagic fever) புனியாவிரிடே (Bunyaviridae) என்ற வகுப்பைச் சேர்ந்த ஒரு ஒட்டுண்ணியால் கடத்தப் படும் வைரஸினால் (நை ரோ வைரஸ்) ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
  • இது முதன்முதலில் 1944 ஆம் ஆண்டில் கிரீமியாவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு இதற்கு கிரீமியன் ஹிமோராகிக் காய்ச்சல் (Crimean hemorrhagic fever) என்று பெயரிடப் பட்டது.
  • இது 1969 ஆம் ஆண்டில் காங்கோவில் நோய்த் தொற்று ஏற்படுவற்குக் காரணமாகக் கண்டறியப்பட்டது.
  • காங்கோ காய்ச்சலானது நோய்த் தொற்று ஏற்பட்ட விலங்குகளின் இரத்தம் மூலமும் நோய்த் தொற்றுள்ள விலங்குகளின் மாமிசத்தை உண்பதன் மூலமும் மனிதர்களுக்குப் பரவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்