TNPSC Thervupettagam

காங்கோ ஜனநாயகக் குடியரசில் M23 கிளர்ச்சியாளர்கள் - கோமா

February 12 , 2025 11 days 59 0
  • ருவாண்டா நாட்டுப் படைப்பிரிவுகளின் ஆதரவுடன் M23 கிளர்ச்சியாளர்கள் காங்கோ ஜனநாயகக் குடியரசின் கோமா நகரத்திற்குள் நுழைந்து அந்நகரத்தைக் கைப்பற்றி உள்ளனர்.
  • சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பிராந்திய மையமான கோமா, ருவாண்டாவுடனான காங்கோவின் எல்லையில் அமைந்துள்ளது.
  • இந்த மோதல் ஆனது 1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலைக்குப் பிறகு காங்கோவில் நடைபெற்ற பல உள்நாட்டுப் போர்களின் தொடர்ச்சியாகும்.
  • இந்த நிகழ்வின் போது, மிக ​​முக்கியமாக டுட்சி இனக்குழுவைச் சேர்ந்த 1 மில்லியன் மக்கள் ஹுட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
  • தற்போதைய ருவாண்டா நாட்டு அதிபர் பால் ககாமே தலைமையிலான டுட்சி இனக் கிளர்ச்சியாளர்கள் அப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பதோடு மேலும் பல ஹுட்டு குற்றவாளிகள் எல்லையைத் தாண்டி காங்கோவிற்குள் தப்பி ஓடினர்.
  • காங்கோ நாட்டின் டுட்சி பிரிவினர் தலைமையிலான கிளர்ச்சிக் குழுவானது, 2012 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதோடு இது முந்தைய டுட்சிகள் தலைமையிலான கிளர்ச்சிகளின் வாரிசு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்