TN-KET (தமிழ்நாடு காசநோயால் இறப்பில்லாத் திட்டம், அதாவது காசநோய் இறப்பு இல்லாத மாநிலம் என்ற திட்டம்) ஆனது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப் பட்டது.
2,500 பொது சுகாதார மையங்கள் ஆனது 30 மாவட்டங்களில் காசநோய் பாதிப்பினைக் கண்டறிந்துள்ளது.
மாநில அரசானது, காசநோய்ப் பாதிப்பினால் எற்படும் முன்கூட்டிய இறப்புகளின் எண்ணிக்கையில் ஏற்கனவே குறிப்பிடத் தக்க அளவில் குறைப்பினை எட்டியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட காசநோயாளிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் சுமார் 70% உயிரிழப்புகள் ஆனது, நோயறிதலுக்குப் பிறகான முதல் இரண்டு மாதங்களுக்குள் நிகழ்கின்றன.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 600க்கும் அதிகமாக இருந்த காசநோய் நோய் அறிதலுக்குப் பிறகான இரண்டு மாதங்களுக்குள் ஏற்படும் இறப்புகள் ஆனது (முன் கூட்டிய காசநோய் இறப்புகள்) 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 350க்கும் கீழ் குறைந்துள்ளது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் 20 நாட்களாக இருந்த, நோயறிதலுக்குப் பிறகு ஏற்படும் இறப்புக்கானச் சராசரிக் காலமானது ஜூலை மாதத்தில் 40 நாட்களாக இரட்டிப்பாகி உள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாநில அளவில் 90%-90%-90% என்ற இலக்கானது எட்டப் பட்டுள்ளது.