காசநோய் சாதனங்களை கோவிட் – 19 சோதனைகளுக்குப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR - Indian Council of Medical Research) ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்பொழுது, இந்தியா அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்ட, நிகழ்நேர நொதித் தொடர் வினையை (RT-PCR - Real Time-Polymerase Chain Reaction) பயன்படுத்துகின்றது.
இதனுடன், ICMR ஆனது ட்ரூநெட் என்ற சோதனையைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்துள்ளது.”
“ட்ரூநெட் சோதனையானது” தற்பொழுது மருந்து எதிர்ப்பு காசநோயைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றது.
“ட்ரூநெட்” என்பது மின்கலத்தினால் இயங்கும் ஒரு சாதனமாகும்.
இந்தச் சாதனமானது சில்லுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இது ஒரு சோதனைக்குக் குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.
தற்பொழுது இந்தியாவில் 800 ட்ரூநெட் சாதனங்கள் உள்ளன.
இதில் 457 சாதனங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளன.
தற்பொழுது, இந்தியா இந்தச் சாதனங்களை இறக்குமதி செய்கின்றது. இந்தச் சாதனங்கள் இந்தியாவில் தயாரிக்கப் படுவதில்லை.