TNPSC Thervupettagam

காசர்கோடு மாவட்டம் – கேரளா

October 24 , 2023 438 days 309 0
  • காசர்கோடு மாவட்டமானது தனது மாவட்ட நிர்வாகத்திற்கான சொந்த மரம், பூ, பறவை மற்றும் இனங்களை அதிகாரப்பூர்வமாக நியமித்த இந்தியாவின் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.
  • இந்த முடிவானது இப்பகுதியின் வளமான பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் இயற்கை பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது.
  • இந்த மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ மரம் ‘கஞ்சிரம்’ (ஸ்டரிக்நாஸ் நக்ஸ்-வோமிகா லின்) ஆகும்.
  • இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட வெண்வயிற்று கடல் பருந்து இனம் மாவட்டப் பறவையாகும்.
  • காசர்கோடு மாவட்ட நிர்வாகமானது, உள்நாட்டில் ‘பீமனமா’ என்று அழைக்கப்படும் கேண்டரின் ராட்சத மென் ஓடு கொண்ட ஆமையினை மாவட்ட இனமாகத் தேர்வு செய்துள்ளது.
  • மாவட்ட மலராக ‘பெரிய பொலதலி’ அல்லது கிரினம் மலபாரிகா தேர்வு செய்யப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்