கவாங்கோ ஷாம்பேசி எல்லை தாண்டிய பிராந்திய காப்புப் பகுதி (KAZA TFCA) அரசுத் தலைவர்கள் உச்சி மாநாடானது ஜாம்பியாவின் லிவிங்ஸ்டோன் நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது "Rivers of Life" என்ற புதிய இடம் சார் அடையாளம் அறிமுகப் படுத்தப் பட்டது.
TFCA அமைப்பின் பகுதிகள் அங்கோலா, போட்ஸ்வானா, நமீபியா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய ஐந்து பங்குதார நாடுகளில் உள்ளன.
தோராயமாக 200,773 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட கவாங்கோ ஷாம்பேசி பிராந்திய எல்லை தாண்டிய வளங்காப்புப் பகுதி உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பு சார்ந்த எல்லை தாண்டிய பிராந்திய காப்புப் பகுதியாகும்.