காசிமிர் விளைவு என்பது ஒரு குவாண்டம் (துளிம) நிகழ்வாகும். இதில் இரண்டு பொருட்கள், நெருக்கமாக வைக்கப்படும் போது, குவாண்டம் சார்ந்த ஏற்ற இறக்கங்களால் ஈர்க்கப் படலாம் அல்லது விலக்கப்படலாம்.
ஒரு இரும்புக் கூழ்மத்தினை (ஃபெரோஃப்ளூயிடு) இடைநிலை ஊடகமாகப் பயன்படுத்தி ஈர்ப்பு மிக்கதாக உள்ள பொருளினை விலக்குத் திறன் கொண்டதாக மாற்றுவதன் மூலம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த விளைவை வெற்றிகரமாக கையாண்டனர்.
1948 ஆம் ஆண்டில், நெதர்லாந்து நாட்டின் இயற்பியலாளர் ஹென்ட்ரிக் காசிமிர் குவாண்டம் இயக்கவியலின் புலப்படாத அதிசயங்களைக் வெளிக் கொணர்வதற்காக இந்தத் தனித்துவமான பரிசோதனையை உருவாக்கினார்.