தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஆனது 2,200 ஆண்டுகள் பழமையான ஒரு ரோமானிய நினைவுச் சின்னமான காசியான்டெப் என்ற கோட்டையையும் சீர்குலைத்தது.
ஒரு மலை உச்சியில் அமைந்த காசியான்டெப் கோட்டையானது துருக்கியில் காசியான்டெப் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
இது 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளின் போது அப்போதைய ரோமானியக் காலத்தில் ஒரு காவற்கோபுரமாக கட்டமைக்கப்பட்டது.
கி.பி.527-565 காலத்தின் போது, பைசான்டைன் பேரரசர் ஜஸ்டினியனின் ஆட்சியின் போது, இந்தக் கோட்டை மேலும் மேம்படுத்தப்பட்டு அதன் தற்போதைய வடிவத்தை பெற்றது.
இது 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் அய்யூபிட்களின் ஆட்சியிலும், ஒட்டாமான் பேரரசின் ஆட்சியிலும் ஒரு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற துருக்கியின் சுதந்திரப் போரின் போது இது ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தது.
ஒட்டாமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரெஞ்சுப் படைகளுக்கு எதிராக அந்த நகரத்தின் பாதுகாப்புத் திறனின் ஓர் அடையாளமாக இது இருந்தது.