காசியாபாத் நகர் நிகாமானது BSE பங்குச் சந்தையில் தன்னைப் பதிவு செய்து கொண்டு உள்ளது
மும்பை பங்கு வர்த்தகத்தின் (Bombay Stock Exchange – BSE) பத்திரத்தைப் பயன்படுத்தி தனியார் பங்குகளின் அடிப்படையில் நகராட்சிப் பத்திரங்களை வழங்கி ரூ.150 கோடி வரை காசியாபாத் நகர் நிகாம் நிதி திரட்டியுள்ளது.
நாட்டில் நகராட்சிக் கழகத்தால் வழங்கப்பட்ட முதல் பசுமைப் பத்திரம் இதுவாகும்.
இந்தத் தொகையானது காசியாபாத்திலுள்ள இந்திரபுரத்தில் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பயன்படுத்தப்படும்.
ரூ.240 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு நிதியளிக்க இத்தொகை பயன்படுத்தப் படும்.
இந்தச் சுத்திகரிப்பு நிலையங்கள், சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தொழிற்சாலைகளில் மீண்டும் உபயோகிக்க வழிவகை செய்யும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், நிதி திரட்டிய இரண்டாவது நகராட்சிக் கழகம் காசியாபாத் நகர் நிகாமாகும்.
இதற்கு முன்பு லக்னோ நகராட்சி கழகமானது BSE பங்குச் சந்தையில் தன்னைப் பதிவு செய்துள்ளது.