அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் வளங் காப்பகத்தில் (KNPTR) கரடிப் பூனை மற்றும் சிறிய நகங்கள் கொண்ட காட்டு நீர்நாய் ஆகிய இரண்டு புதிய பாலூட்டி இனங்கள் தென்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய புனுகுப் பூனை இனமான பிந்துரோங், வலசை போகும் பறவைகளின் கணக்கெடுப்பின் போது தென்பட்டது.
சிறிய நகம் கொண்ட காட்டு நீர்நாய் ஆனது உலகின் மிகச்சிறிய நீர்நாய் இனமாகும்.
இந்தப் பாலூட்டி இனமானது இந்தியா வழியாக கிழக்கு நோக்கி தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனா வரையான பரவலான நிலப்பரப்புகளில் காணப்படுகிறது.
இந்தியாவில், மேற்கு வங்காளம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரளாவின் சில பகுதிகளின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இது பெரும்பாலும் காணப்படுகிறது.
இந்தப் பூங்காவில் தற்போது 37 பாலூட்டி இனங்கள் உள்ளதோடு இது அந்தப் பூங்காவின் பல்லுயிர் பெருக்கத்தையும் மேம்படுத்துகிறது.