இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) 2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியிலிருந்து காசோலைத் துண்டிப்பு முறைக்காக (CTS - Cheque Truncation System) நேர்மறை செலுத்து முறைக்கான தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
RBI ஆனது CTSற்கான நேர்மறை செலுத்து முறையைத் தொடங்க இருக்கின்றது.
இந்த நேர்மறை செலுத்து முறையானது இந்திய தேசியப் பண வழங்கீட்டுக் கழகத்தினால் மேம்படுத்தப்பட உள்ளது.
நேர்மறை செலுத்து முறை
காசோலை வழங்குபவர் எஸ்எம்எஸ், கைபேசிச் செயலி, இணையவழி வங்கியியல், அல்லது ஏடிஎம் ஆகியவை மூலம் மின்னணு வழியாக தேதி, பெறுபவரின் பெயர், பெறுபவர் பெறும் தொகை போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விவரங்கள் காசோலை மூலம் பணம் வழங்குவதற்கு முன்பு சரிபார்க்கப்பட வேண்டும்.