2019 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் 2 புதிய காச நோய் மருந்துகளுக்காக இந்தியாவின் முதலாவது மிகப் பெரிய சோதனை முன்னோட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சமீபத்திய சோதனை முன்னோட்டத்தில் 2 காச நோய் தடுப்பு மருந்துகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவையாவன
இம்முவாக் (மைக்கோபாக்டீரியம் இண்டிகஸ் பிரணி என்றும் அழைக்கப்படுகின்றது) - அகமதாபாத்தில் உள்ள கேடிலா என்ற மருந்து நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
VPM1002 - புனேவில் உள்ள செரம் இந்தியா நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.
தற்பொழுது பிசிஜி தடுப்பு மருந்து (பேசிலி கால்மெட்டி கியூரின்) பயன்படுத்தப்படுகின்றது.
இது 100 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களில் நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு மிகக் குறைந்த அளவிலான பாதுகாப்பை அளிக்கின்றது.