சமீபத்தில் மத்திய அரசானது காடுகளின் சிறு உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைத் (MSP - Minor Support Price) திருத்தியமைத்துள்ளது.
MFP (Minor Forest Produce) என்பது தாவரத்திலிருந்து உருவாகிய மரம் அல்லாத அனைத்து வன உற்பத்திப் பொருள்களையும் உள்ளடக்கியுள்ளது.
இது மூங்கில், பிரம்புகள், தீவனங்கள், இலைகள், கோந்து, மெழுகுகள், சாயங்கள், பிசின் மற்றும் பல்வேறு வகையான உணவுகளான கொட்டைகள், காடுகளில் விளையும் பழங்கள், தேன், அரக்கு, பட்டு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
MFPகளுக்கான MSP ஆனது மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட விலைப் பிரிவுக் குழுவினால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப் படுகின்றது.
MSP என்பது அரசாங்கமானது விவசாயிகள் மற்றும் பழங்குடியினரிடமிருந்து வாங்கப்படும் உற்பத்திப் பொருளின் விலையைக் குறிக்கின்றது.