இந்தியாவின் காட்டுக்கடுகு மற்றும் கடுகு உற்பத்தியானது கடந்த ஆண்டை விட 7% அதிகரித்து 2024 ஆம் ஆண்டில் 12.09 மில்லியன் மெட்ரிக் டன் என்ற சாதனை அளவை எட்டும்.
அதிகளவிலான காட்டுக்கடுகு உற்பத்தியானது உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் இறக்குமதியாளராக விளங்கும் இந்தியாவிற்கு மலேஷியா, இந்தோனேஷியா, பிரேசில், அர்ஜென்டினா, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து மேற்கொள்ளப்படும் விலையுயர்ந்த பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கு உதவும்.
இந்தியா தனது வருடாந்திரத் தேவையில் 70 சதவீதப் பங்கினை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.
இந்த உற்பத்தி அதிகரிப்பு ஆனது 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மேலும் 5% அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டது.