TNPSC Thervupettagam

காட்டெருமைகள் மறு அறிமுகம்

October 20 , 2022 640 days 336 0
  • இலங்கையில் காட்டெருமைகளின் எண்ணிக்கையினை மீட்டெடுகச் செய்வதற்காக வேண்டி இந்தியக் காட்டெருமைகளை அங்கு இடம் மாற்றுமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • இந்த முன்மொழிதலுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இந்த வகையிலான முதல் ஒப்பந்தம் இதுவாகும்.
  • இது உலகளவில் நிலவி வரும் வனவிலங்கு அல்லது விலங்கியல் சார்ந்த அரசுமுறை பேச்சுவார்த்தைக்கு ஏற்ப உள்ளது.
  • குறைந்தது 6 இந்திய காட்டெருமைகளையாவது அங்கு இடம் மாற்றுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
  • இந்தியக் காட்டெருமை அல்லது கவுர் சிங்கள மொழியில் கவரா என்று அழைக்கப் படுகிறது.
  • ஒரு காலத்தில் இலங்கையில் பரவலாக இவை காணப்பட்டாலும் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவை அழிந்து விட்டன.
  • இந்தியக் காட்டெருமையானது, உலகிலேயே மிகப்பெரிய காட்டு எருது இனமாகும்.
  • IUCN அமைப்பின் சிவப்பு நிறப் பட்டியலில் இந்தியக் காட்டெருமையானது, "பாதிக்கப் படக்கூடிய இனமாக" பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்