TNPSC Thervupettagam

காணாமல் போய்க் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் – மே 25

May 29 , 2019 2008 days 490 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று காணாமல் போய்க் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினத்தின் சிறப்புக் குறியீடு “என்னை மறந்து விடு – பூக்களை அல்ல” என்பதாகும்.
  • 1983-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மே 25-ஆம் தேதியை காணாமல் போய்க் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார்.
  • 2001-ஆம் ஆண்டில், முதல் முறையாக மே 25-ஆம் தேதி காணாமல் போய்க் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான சர்வதேச தினமாக அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்தத் தினமானது குழந்தைக் கடத்தல் தொடர்பான பிரச்சனையை எடுத்துக் காட்டுகின்றது. இது கண்டுபிடிக்கப்படாத காணாமல் போன குழந்தைகளைக் கௌரவிக்கின்றது. இது, தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக பெற்றோர்களுக்கு கல்வியறிவு ஏற்படுத்திட முயற்சிக்கின்றது.
  • 23 நாடுகளைச் சேர்ந்த ஒரு அமைப்பான “சர்வதேச காணாமல் போய்க் கொண்டிருக்கும் குழந்தைகளின்” அமைப்பானது சர்வதேசக் குழந்தை மீட்பில் முன்னிலை வகிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்