TNPSC Thervupettagam

காணொளி (வீடியோ) திருட்டு தடுப்புப் பிரிவு பெயர் மாற்றம்

October 29 , 2017 2631 days 1070 0
  • காணொளி திருட்டு தடுப்பு பிரிவை (Video Piracy Cell) அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு (Intellectual Property Right Enforcement Cell - IPREC) என தமிழக அரசாங்கம் மாற்றி அமைத்துள்ளது.
  • பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், வடிவமைப்புகள், காப்புரிமைகள் மற்றும் பொருட்களின் புவியியல் குறியீடுகள் ஆகியவற்றின் உரிமை மீறல் போன்ற குற்றங்களை விசாரணை செய்ய மாநிலத்தின் வெவ்வேறு மாவாட்டங்களில் உள்ள IPERC பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இந்த சிறப்புப் பிரிவானது கீழ்க்காணும் சட்டங்களின் விதிமீறல்களில் இருந்து எழும் வழக்குகளையும் விசாரிக்கும்.
    • கேபிள் தொலைக்காட்சி தொடரமைவு (ஒழுங்குமுறை) சட்டம்
    • ஒளிப்பதிவு சட்டம்.
    • தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம்.
    • குறைகடத்தி ஒருங்கிணைந்த மின்சுற்றுவழி வடிவ அமைவுச் சட்டம் (Semiconductor Integrated Circuits Layout design Act).
    • உயிரியல் பல்வகைமைச் சட்டம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்