ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் பாதுகாப்பு பற்றி மக்களிடையே பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அஸ்ஸாம் மாநிலம் செப்டம்பர் 22 ஆம் தேதியை ரைனோ தினமாக (Rhino Day) கொண்டாட உள்ளது.
மேலும் காண்டாமிருகங்களின் பாதுகாப்பு மற்றும் பேணுதலுக்காக தேசிய ரைனோ திட்டத்தின் (National Rhino Project) வரிசையில் மாநில ரைனோ திட்டம் (State Rhino Project) ஒன்றையும் அஸ்ஸாம் மாநிலம் தொடங்க உள்ளது.
உலகம் முழுவதும் அறியப்படுபவையாக உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இந்தியாவில் அஸ்ஸாமின் மனாஸ் (Manas) மற்றும் காஸிரங்கா தேசியப்பூங்காவில் மட்டுமே அதிகளவில் காணப்படுகின்றன .