TNPSC Thervupettagam

காண்டாமிருகத்தின் நிலை குறித்த அறிக்கை 2024

September 25 , 2024 62 days 146 0
  • சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை அமைப்பானது, 2024 அம் ஆண்டு காண்டா மிருக இனங்களின் நிலை குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • தற்போது, ​​ உலகளவில் ஐந்து வகையான இனங்களிலும் ஒட்டு மொத்தமாக 28,000க்கும் குறைவான காண்டாமிருகங்களே உள்ளன.
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சுமார் 100க்கும் குறைவாக இருந்த பெரிய ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கையானது இன்று சுமார் 4,014 ஆகப் படிப்படியாக அதிகரித்துள்ளது.
  • கடந்த பத்தாண்டுகளில் இது 20% அதிகரித்துள்ளது.
  • இந்தோ-நேபாள தெராய் பகுதி, வடக்கு மேற்கு வங்காளம், அசாம் ஆகிய பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
  • இந்தியாவில், 2021 ஆம் ஆண்டின் இறுதியில், ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை 3,262 ஆக இருந்தது.
  • அவற்றில் 90%க்கும் அதிகமானவை காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ளன.
  • ஆப்பிரிக்காவில் காண்டாமிருக வேட்டையாடுதல் 2022 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 4% அதிகரித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் குறைந்தது 586 ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்கள் வேட்டையாடப் பட்டன (ஒவ்வொரு 15 மணி நேரத்திற்கும் ஒன்று).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்