இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப் படுகிறது; இந்த ஆண்டிற்கான விழாவானது நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் உள்ள காதிமாய் கோவிலில் நடத்தப் பட உள்ளது.
விலங்குகளை பலியிடுவதற்கெனப் புகழ்பெற்ற இந்தத் திருவிழாவானது, மிகப்பெரிய மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய விலங்குகள் பலி கொடுக்கும் விழாக்களில் ஒன்றாகும்.
நேபாளம், இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள சில நாடுகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்தத் திருவிழாவானது உலகின் மிகப்பெரிய விலங்குகளை பலி கொடுக்கும் திருவிழாக்களில் ஒன்றாக உள்ளது.
பலியிடும் விலங்குகளில் நீர் எருமை, பன்றிகள், ஆடுகள் மற்றும் பறவைகள் ஆகியன அடங்கும்.