மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, மிகவும் துல்லியமான காதிரைச்சல் (Tinnitus) ஒலி உணர்வினை ஈடு செய்யும் சாதனம் மற்றும் தனிப் பயனாக்கக் கூடிய தீர்வு (கைபேசி அடிப்படையிலான மென்பொருள்) ஆகியவற்றை மலிவு விலையில் உருவாக்கியுள்ளது.
டைன்னிடஸ் என்பது எந்த வெளிப்புறத் தூண்டுதலும் இல்லாத நிலையில் மிகை ஒலி உணர்தல் ஆகும்.
இது கடுமையான தூக்கக் கலக்கம், மனச்சோர்வு, பதட்டம், மன ஆரோக்கியத்தில் பாதிப்பு, எரிச்சல் மற்றும் சமூக வாழ்க்கையைப் பாதித்தல் ஆகியவற்றினை மிகப் பெருமளவு ஏற்படுத்துகிறது.
ஒட்டு மொத்தமாக டைன்னிடஸ் ஆனது, வாழ்க்கைத் தரத்தில் ஒரு மனச்சோர்வை ஏற்படுத்தும் வகையிலான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
டைன்னிடஸ் என்பது உலகளவில் 740 மில்லியனுக்கும் அதிகமான வயது வந்தோரைப் பாதிக்கிறது என்பதோடு 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சனையாக இது கருதப்படுகிறது.