TNPSC Thervupettagam

காதி கடைகள் இடங்காட்டும் செயலி

April 10 , 2018 2276 days 712 0
  • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகமானது (Ministry of Micro, Small & Medium Enterprises- MSME)  நாட்டில் உள்ள 40,000 காதி நிறுவனங்களை புவியிடங்காட்டுவதற்காக (locating)  கைபேசி செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைக்  குழுவின் (Khadi and Village Industries Commission-KVIC) 9-ஆவது  தேசிய ஆணையத்தின் கூடுகை   அண்மையில்  புது தில்லியில் நடைபெற்றது. மத்திய சிறு, குறு மற்றும்  நடுத்தர நிறுவன   அமைச்சகத்தின் இணை அமைச்சர் (Minister of State) கிரிராஜ் சிங் இச்சந்திப்பிற்குத்  தலைமை தாங்கினார்.
  • காதி பொருட்களை சர்வதேச வியாபார அடையாளங்களாக (International brand) மாற்றுவதற்கு காதி பொருள்களின் உற்பத்தியை வெளிநாடுகளில் மேம்படுத்த காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைக் கழகமானது   ஓர் ஏற்றுமதிப் பிரிவை (Export cells) அமைக்க உள்ளது.
  • காதி மற்றும் கிராமத் தொழிற்துறையின் உற்பத்திப் பொருட்களானது பிரதம மந்திரி வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டம் (Prime Minister's Employment Generation Programme - PMEGP) போன்ற திட்டங்களின்  மூலம் மத்திய அமைச்சகத்தால் நிதியளிக்கப்படும் 7 இலட்சம் தனியார் வீட்டு தொழிற் உற்பத்தி அலகுகளால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்